Friday, November 2, 2018

அக்பர் பீர்பால்

கோடைக் காலம். அக்பர் இளவரசர், பீர்பால் மூவரும் உலவச் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் புழுக்கம் தாளாத அக்பர் கனமான தன் மேல் அங்கிகளைக் கழற்றிப் பீர்பாலிடம் கொடுத்துத் தூக்கி வரச் சொன்னார். அதையே தூக்கி வரச்சிரமப்பட்ட பீர்பாலிடம் இளவரசரும் தனது அங்கிகளைக் கழற்றிக் கொடுத்தார்.

இருவரின் ஆடைகளையும் சுமந்து கொண்டு வந்த பீர்பாலைக் கண்டதும் அக்பருக்கு பொதி சுமக்கும் கழுதையின் ஞாபகம் வந்து விட்டது. அக்பர் கேலி யாக, ‘என்ன பீர்பால் ஒரு கழுதையின் சுமையைச் சுமந்து வருகியர்கள் போலிருக்கிறதே?’ என்றார்.

மன்னர் தன்னைக் கழுதை என்று சொன்னதை நினைத்துப் பீர்பால் வருத்தப்பட்டாலும் அதை மறைத்துக் கொண்டு சாதுர்யமாக, ‘தவறு மன்னா, நான் இரண்டு கழுதைகளின் சுமையை அல்லவா சுமந்து கொண்டு வருகிறேன்’ என்றார்.

நான் ஒன்றுமே இல்லை. பூஜ்யம்

சர்சில் ஒரு நாள் பாதிரியார் உணர்ச்சி வசப்பட்டு உரக்கக்கூவி அழுதார். “ஆண்டவரே, நான் கீழிலும் கீழானவன். கடையினும் கடையேன். எனக்கு உங்கள் கருணையை கேட்கக்கூட தகுதி இல்லை. நான் ஒன்றுமே இல்லை. பூஜ்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”

இதை பார்த்துக்கொண்டு இருந்த சர்ச் மணி அடிப்பவனும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டான். அவனும் முட்டி போட்டுக்கொண்டு உரக்க கூவ ஆரம்பித்தான். “ ஆண்டவரே! நான் பாவி. சூன்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”

இது காதில் விழுந்ததும் பாதிரியார் திரும்பி முறைத்தார். “ ஹா! தோ பாருய்யா, யார் தாந்தான் சூன்யம்ன்னு கூவறது!”