Wednesday, May 20, 2015

பத்திலிருந்து பத்தொன்பது வயதுக்குட்பட்டவர்களை வளரும் இளமைப் பருவத்தினர் என்று உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது. இவர்கள் குழந்தைகளும் இல்லை; வயது வந்தவர்களும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வளரும் பருவம். இதனால் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் காணப்படும்.

ஐஸ்வர்யா ராய் போல் ஒல்லியாக இருக்கவேண்டும் என்று டீன்ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள்  இதற்கு மருத்துவ உலகில், ‘ஐஸ்வர்யா ராய் சிண்ட்ரோம்’ என்று பெயர் .அதாவது ஐஸ்வர்யா ராய் போல் ஒல்லியாக இருக்கவேண்டும் என்று டீன்ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள், ஒல்லியாக இருக்கும் பெண்களைத்தான் விரும்புகிறார்கள்; ஒல்லிதான் கவர்ச்சி; எல்லா நடிகைகளும் மாடல் அழகிகளும் ஒல்லியாகத்தான் இருக்கிறார்கள்; ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்ற எண்ணங்கள்தான் இதற்கு காரணம். 

எனவே மெலிய வேண்டும் என்பதற்காககுறைவாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் ரத்தசோகை, தாழ்வு மனப்பான்மை, படிப்பில் பின்னடைவு, அதிகப்படியான சோர்வு, மன அழுத்தம், தனிமையை விரும்புதல், சாப்பாட்டில் சமச்சீரின்மை ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். அவர்களுக்கு, உடல் மட்டும் ஒரு மனிதனுக்கு முக்கியமில்லை; அறிவு, கடும் உழைப்பு, விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என புரியவைக்க வேண்டும். 

கொழுகொழு குழந்தைகள் எப்போதும் கொஞ்சலுக்கு உரியவர்கள். கொழுகொழு குழந்தைகள்தான் ஆரோக்கியமானவர்கள் என்கிற எண்ணம் பலருக்கும் இன்றும் இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் அவர்களைக் கொஞ்சி, செல்லப் பெயர்கள் வைத்து ஆராதிக்கிற பெற்றோர், குழந்தைகள் 10 வயதைக் கடக்கும்போது கலங்கிப் போகிறார்கள்.‘செல்லக்குட்டி, ஆப்பிள், ஜாங்கிரி, பூந்தி, என் கொழுகொழு செல்லமே’ எனக் கொஞ்சு வதை நிறுத்துங்கள். உங்கள் குழந்தை குண்டாகிக்கொண்டு  டைப் 2 நீரிழிவை யும் ஒபிசிட்டி எனப்படுகிற பருமன் பிரச்னையையும் ஏற்றுக் கொள்ளும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கிவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.குழந்தைப் பருவத்தில் உடல் எடையை குறைப்பது சற்று சுலபம். எவ்வளவு ருசித்து குழந்தை சாப்பிடு கிறது என அன்பாய் பூரித்து, தினமும் அளவுக்கு அதிகமாக உணவு, இனிப்பு மற்றும் தின்பண்ட வகைகளைக் கொடுக்காமல் அளவோடு சாப்பிட கற்றுக் கொடுத்து, அவர்கள் அதை மீறும் சமயங்களில் கண்டிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

.நல்ல சுவையான உணவு வகைகளை அதிகம் சமைத்து, அதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வேண்டி, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சூடாக்கி சாப்பிடுவதை தயவு செய்து அறவே நிறுத்துங்கள். மேலும் தேவைக்கு அதிகமாக தின்பண்டங்கள் அல்லது நொறுக்குத் தீனி வகைகளை வீட்டில் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை சேமித்து வைப்பதை இன்றோடு விட்டுவிடுங்கள்.  குழந்தைகளுக்கு சரிவிகித உணவின் (Balanced Diet) முக்கியத்துவத்ைத அடிக்கடி விளக்கி, உண்மையை உணரச் செய்யுங்கள். 

று குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் டி.வி.  மற்றும் கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் செலவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமையாகும். அதன் திரையில் இருந்து வரும் நீல ஒளியின் (Blue light) தாக்கம் குழந்தைகளின் உடலுக்கு உகந்ததே அல்ல. அதை இந்த இளம் வயதில் அவர்களால் தாங்க முடியாது. இதனால் குழந்தைகளின் உடலுக்கு தீமையே உண்டாகும். இதன் மறுபக்கம் என்னவெனில் அதன் காரணமாக குழந்தைகளுக்கு அதிக பசி (Increase in appetite) எடுத்து, தேவைக்கு அதிகமான உணவு உட்செல்ல ஏதுவாகிறது.

குழந்தைகளின் நல்ல ஓய்வுக்கு உற்ற  நண்பன் ‘நல்ல தூக்கமே’. அப்படி ஓய்வு எடுத்து தூங்காத குழந்தைகள், தங்களின்  வயிறை குப்பைத் தொட்டியாக்கி இனிப்பு,  
ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனிகளுக்கு அடிமையாகி விடுவார்கள். -

ஒளியை நோக்கி

ஒளியை நோக்கி

ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க 


நாள் 1; பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். 
நாள் 2;முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்
நாள் 3:மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும்
நாள் 4:நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். 
நாள் 5:ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும்
நாள் 6:ஆறாம் நாளில் மதிய வேளையில் ஒரு கப் சாதத்தையும், மற்ற நேரங்களில் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும்.
நாள் 7இந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்.


visit
www.sri2015.hpage.com